பெட்ரோல் பங்க் அமைக்க கடன் உதவி


பெட்ரோல் பங்க் அமைக்க கடன் உதவி
x

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சோ்ந்தவர்கள் பெட்ரோல் பங்க் அமைக்க கடன் உதவி அளிக்கப்படும் என்று கலெக்டர் மகாபாரதி கூறினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் பெட்ரோல் நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற www.petrolpumpdealerchayan.in, http://www.petrolpumpdealerchayan.in என்ற இணையதளத்தில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண், பெண் அனைவரும் வருகிற 27-ந் தேதிக்குள்(புதன்கிழமை) விண்ணப்பிக்கலாம். பாரத் பெட்ரோலியம் லிமிடெட் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாட்கோ தலைமை அலுவலக மாநில திட்ட மேலாளர் (திட்டங்கள்) கைபேசி எண் 7358489990-ல் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள தாட்கோ மேலாளர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story