மகளிர் சுய உதவி குழுவினருக்கான கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
சீர்காழி தென்பாதியில் உள்ள நகர கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சீர்காழி:
சீர்காழி தென்பாதியில் உள்ள நகர கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் உள்ள நகர கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழுவினர் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கி மேலாளர் சிங்காரவேலு வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
ரூ.13 கோடி கடன் தள்ளுபடி
அப்போது அவர் பேசியதாவது:-பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000, அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மயிலாடுதுறை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.13 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.சம்பா நெல்லை கொள்முதல் செய்ய 3,664 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. இதன் மூலம் 50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.