உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்


உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்
x

தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று திட்டக்குழு கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.

திருவண்ணாமலை

தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று திட்டக்குழு கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.

திட்டக்குழு கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு 2-வது கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் முன்னிலை வகித்தார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப் வரவேற்றார்.

கூட்டத்திற்கு மாவட்ட திட்ட குழு தலைவர் சீ.பார்வதிசீனுவாசன் தலைமை தாங்கி பேசியதாவது:-

இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். முதல்-அமைச்சர் கொண்டு வரும் எண்ணற்ற தொலைநோக்கு திட்டங்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது.

நல்ல வரவேற்பு

பெண்களின் நலன் கருதி கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் மிகசிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இதற்கு பெண்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலுவின் சீரிய முயற்சியில் திருவண்ணாமலை மாவட்டம் வளர்ச்சி திட்டங்களில் தமிழகத்திலேயே முதன்மை மாவட்டமாக சென்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்ததால் தடுப்பூசி செலுத்தியதில் 98 சதவீதம் பெற்று மாநிலத்திலேயே 2-வது இடம் பிடித்துள்ளது.

முழுமையான ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டம் கல்வியில் பின் தங்கியுள்ளது. தேர்ச்சி சதவீதமும் குறைந்துள்ளது. எனவே அதிகம் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள பள்ளிகளை கண்டறிந்து அந்த பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் பள்ளி அளவில் கல்வித்திறனை வளர்க்க பெற்றோர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். .

கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, ஊட்டச்சத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட திட்ட குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்துரையாடினர்.

இதில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், ஞானசவுந்தரி மாரிமுத்து, புஷ்பா வெங்கடேசன், முருகேசன், முத்துமாறன், செல்வம், சுகந்தி, புருஷோத்தமன், ஒன்றியக்குழு தலைவர்கள் பூ.அய்யாகண்ணு, ஜீவாமூர்த்தி, புதுப்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் வ.செல்வபாரதி மனோஜ்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கந்தன் மற்றும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட ஊராட்சி அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை நன்றி கூறினார்.


Next Story