சிறப்பு மக்கள் நீதிமன்றம்


சிறப்பு மக்கள் நீதிமன்றம்
x
தினத்தந்தி 8 July 2023 5:00 PM GMT (Updated: 9 July 2023 10:08 AM GMT)

காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

திருப்பூர்

காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான சந்தான கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். இந்த மக்கள் நீதிமன்றம் ஒரு அமர்வாக நடைபெற்றது. காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான சந்தானகிருஷ்ணசாமி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில்குமார் ஆகியோர் இந்த அமர்வில் பங்கேற்றனர்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சொத்து வழக்குகள், மோட்டார் வாகன சிறு வழக்குகள் என மொத்தம் 65 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளில் 26 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதில் ரூ.98 லட்சத்து 72 ஆயிரத்து 280 மதிப்புக்கு சமரச தீர்வு காணப்பட்டது.


Next Story