கீழ் சாத்தம்பூர் ஏரியில் மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், 4 லாரிகள் ‌பறிமுதல்


கீழ் சாத்தம்பூர் ஏரியில்  மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், 4 லாரிகள் ‌பறிமுதல்
x
தினத்தந்தி 5 Oct 2022 6:45 PM GMT (Updated: 5 Oct 2022 6:46 PM GMT)

கீழ் சாத்தம்பூர் ஏரியில் மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், 4 லாரிகள் ‌பறிமுதல்

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே உள்ள கீழ்சாத்தம்பூர் கிராமத்துக்குட்பட்ட ஏரியில் ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் டிப்பர் லாரிகளில் மண் வெட்டி கடத்தப்படுவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கீழ் சாத்தம்பூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் சசிகலா, வருவாய் ஆய்வாளர் அம்ரித் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அதிகாரிகளை கண்டதும் ஏரியில் மண் வெட்டிய சிலர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மேலும் அங்கு பொக்லைன் எந்திரங்கள் மூலம் 4 டிப்பர் லாரிகளில் மண் வெட்டி கடத்த முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து நாமக்கல் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தாசில்தார் சக்திவேல் உத்தரவின்பேரில் கீழ்சாத்தம்பூர் ஏரியில் இருந்து மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரங்கள் மற்றும் 4 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து பரமத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.


Next Story