மின்சாரம் தாக்கி லாரி கிளீனர் பலி
பண்ருட்டியில் மின்சாரம் தாக்கியதில் லாரி கிளீனர் பரிதாபமாக இறந்தார்.
கடலூர்
பண்ருட்டி,
பண்ருட்டி எல்.என்.புரம் குயவர் வீதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 27). லாரி கிளீனராக வேலை பார்த்து வந்தார். இவரது வீட்டில் மின்சார கோளாறு இருந்து வந்துள்ளது. இதனால் வீட்டில் இருந்த எர்த் கம்பியில் சில நேரங்களில் மின்சாரம் வந்தாக தெரிகிறது. இந்த நிலையில் சந்திரன் தனது வீட்டில் உள்ள கழிப்பறைக்கு சென்றார். அப்போது அங்கு சுவற்றில் இருந்த எர்த் கம்பியில் சந்திரனின் கை பட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story