செலவுக்கு மனைவி பணம் தராததால் விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை
செலவுக்கு மனைவி பணம் தராததால் விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையம் சக்தி நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 39) லாரி டிரைவர். இவரது மனைவி பேபி (28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பேபி பிரிமியர் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி காலையில் ராஜா தனது மனைவி பேபி வேலைக்கு சென்று வைத்திருந்த பணத்தை செலவு செய்வதற்காக கேட்டு தகராறு செய்து உள்ளார்.. அப்போது பேபி தனக்கு செலவிற்கு பணம் வேண்டும் என்று சொன்னதால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைடுத்து பேபி தனது அம்மா வீட்டிற்கு தனது மகன்களுடன் சென்றார். இதனால் வீட்டில் தனியாக இருந்த ராஜா செலவிற்கு மனைவி பணம் தரவில்லையே என்ற கவலையில் வீட்டில் செடிக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராஜா இறந்தார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.