ஈரோட்டில் ரெயில் முன் பாய்ந்து லாரி டிரைவர் தற்கொலை; குடும்ப தகராறில் விபரீத முடிவு

ஈரோட்டில் குடும்ப தகராறில் ரெயில் முன் பாய்ந்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோட்டில் குடும்ப தகராறில் ரெயில் முன் பாய்ந்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
லாரி டிரைவர்
ஈரோடு வெண்டிபாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 36). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ராஜேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றார். இதனை அவரது மனைவி கவிதா கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த ராஜேஷ் கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ராஜேஷ் வீட்டில் இருந்து வெளியில் புறப்பட்டார். அப்போது அவரது அண்ணன் கேட்டதற்கு, கடைக்கு செல்வதாக ராஜேஷ் கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
தற்கொலை
இந்தநிலையில் வெண்டிபாளையம் பகுதியில் செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு ஒருவர் பிணமாக கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு நேற்று அதிகாலையில் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.
விசாரணையில் இறந்தவர் ராஜேஷ் என்பதும், அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜேசின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.