லாரி டிரைவர் திடீர் சாவு


லாரி டிரைவர் திடீர் சாவு
x
தினத்தந்தி 11 July 2023 12:15 AM IST (Updated: 11 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே லாரி டிரைவர் திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே வரஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 36) லாரி டிரைவர். இவர் வேலை காரணமாக வெளியே சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பச்சையப்பன் தனது மனைவி லட்சுமியிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அதற்கு லட்சுமி உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேளாக்குறிச்சி பகுதியில் உள்ள கோமுகி ஆற்றங்கரையில் பச்சையப்பன் இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பச்சைப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சையப்பன் நெஞ்சுவலி காரணமாக இறந்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி டிரைவர் திடீரென இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story