ஆட்டையாம்பட்டி அருகேலாரி டிரைவர் அடித்துக்கொலைபோலீசார் விசாரணை


ஆட்டையாம்பட்டி அருகேலாரி டிரைவர் அடித்துக்கொலைபோலீசார் விசாரணை
x

ஆட்டையாம்பட்டி அருகே லாரி டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

பனமரத்துப்பட்டி

ஆட்டையாம்பட்டி அருகே லாரி டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி டிரைவர்

சேலம் மணியனூர் காத்தாயம்மாள் நகரை சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது 46). லாரி டிரைவர். இவரது மனைவி ஜோதி (36). இவர்களுக்கு நவீன் (17) என்ற மகனும், ஜனனி (15) பவித்ரா (13) என்ற 2 மகள்களும் உள்ளனர். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதி கணவரை பிரிந்து ஆட்டையாம்பட்டி சென்னகிரியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.

தொடர்ந்து அவர் தந்தை வீட்டின் அருகிலேயே வீடு வாடகைக்கு எடுத்து ஜோதி குழந்தைகளுடன் வசித்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதால் செந்தில்முருகன் தனது தாய் சின்னப்பிள்ளையுடன் மணியனூரில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை செந்தில் முருகனுக்கு ஜோதியின் தம்பி போன் செய்து மகன் நவீனுக்கு உடல்நலம் சரியில்லை என கூறி உள்ளார். இதனையடுத்து மகனைப் பார்க்க செந்தில் முருகன் சென்னகிரிக்கு வந்துள்ளார்.

பிணமாக கிடந்தார்

இந்த நிலையில் நேற்று காலை செந்தில்முருகனின் தாய் சின்னப்பிள்ளைக்கு ஜோதியின் தம்பி மீண்டும் போன் செய்து உனது மகன் இங்கே கட்டிலில் பேச்சு, மூச்சு இல்லாமல் உள்ளார் என கூறியுள்ளார். இதையடுத்து சின்னப்பிள்ளை விரைந்து சென்று பார்த்தார். அப்போது செந்தில்முருகன் தலையில் காயத்துடன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து சின்னப்பிள்ளை மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு அமலஅட்வின் தலைமையில், ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவல்லி மற்றும் போலீசார் விரைந்து சென்று செந்தில்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடித்துக்கொலை

மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. ஆனால் நாய் அங்கும் இங்கும் ஓடியும், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை பதிவு செய்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் செந்தில்முருகன் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் முருகனின் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story