காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் வனத்துறை ஊழியர்களிடம் லாரி டிரைவர் வாக்குவாதம்- போக்குவரத்து பாதிப்பு

காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் வனத்துறை ஊழியர்களிடம் லாரி டிரைவர்  வாக்குவாதம்- போக்குவரத்து பாதிப்பு
x

காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் வனத்துறை ஊழியர்களிடம் லாரி டிரைவர் வாக்குவாதம்- போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு

தாளவாடி

தாளவாடியில் இருந்து கோவைக்கு லாரி ஒன்று நேற்று மாலை 6.30 மணி அளவில் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த வனத்துறை ஊழியர்கள் மாலை 6 மணிக்கு மேல் லாரிகள் செல்ல அனுமதி இல்லை எனக் கூறி தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த லாரி டிரைவர் வனத்துறை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் லாரியை ரோட்டின் நடுவே டிரைவர் நிறுத்தினார். இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இதுபற்றி அறிந்ததும் வனத்துறை உயர் அதிகாரிகள் அங்கு வந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது. இந்த சம்பவம் காரணமாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story