செம்மண் கடத்த முயன்ற டிப்பர் லாரி பறிமுதல்


செம்மண் கடத்த முயன்ற டிப்பர் லாரி பறிமுதல்
x

குளச்சல் அருகே செம்மண் கடத்த முயன்ற டிப்பர் லாரி பறிமுதல்

கன்னியாகுமரி

குளச்சல்,

குளச்சல் தனிப்பிரிவு ஏட்டு அருளரசு மற்றும் தலைமை காவலர் வசந்த் ஆகியோர் நேற்று குளச்சல் பகுதியில் பள்ளி ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஒரு டிப்பர் லாரி செம்மண் ஏற்றி சென்று கொண்டிருந்தது. உடனே போலீசார் டிப்பர் லாரியை நிறுத்தி ஆவணங்களை சரி பார்த்த போது செம்மண் லோடு மண்டைக்காடு அருகே நடுவூர்க்கரை பகுதியில் இருந்து கோணத்திற்கு எடுத்து செல்ல அனுமதி சீட்டு பெற்று விட்டு கோணம் செல்லாமல் கள்ளத்தனமாக குளச்சல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. உடனே போலீசார் செம்மண்ணுடன் டிப்பர் லாரியை கல்குளம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். டிரைவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

1 More update

Next Story