கொரோனாவால் தாய், தந்தையை இழந்த 5 பேருக்கு ரூ.10 லட்சம் வைப்புநிதி கலெக்டர் வழங்கினார்


கொரோனாவால் தாய், தந்தையை இழந்த  5 பேருக்கு ரூ.10 லட்சம் வைப்புநிதி  கலெக்டர் வழங்கினார்
x

கொரோனாவால் தாய், தந்தையை இழந்த 5 பேருக்கு ரூ.10 லட்சம் வைப்புநிதியை கலெக்டர் வழங்கினார்.

தேனி

குழந்தைகளுக்கான பிரதம மந்திரி நலத்திட்டத்தின் (பி.எம். கேர்ஸ் திட்டம்) கீழ், கொரோனா வைரஸ் பாதிப்பால் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்புநிதி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முரளிதரன், கொரோனா தொற்றால் தாய், தந்தை இருவரையும் இழந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த குழந்தைகளுடன் காணொலி காட்சி மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பின்னர், 5 பயனாளிகளுக்கு பி.எம். கேர்ஸ் பெட்டகத்தை கலெக்டர் முரளிதரன் வழங்கினார். அந்த பெட்டகத்தில் பிரதமரின் கடிதம், ரூ.10 லட்சம் வைப்பு நிதிக்கான தபால் நிலைய கணக்கு புத்தகம், ரூ.5 லட்சத்துக்கான பிரதமரின் காப்பீடு திட்ட அட்டை, பி.எம். கேர்ஸ் திட்டத்தின் சான்றிதழ் போன்றவை இடம்பெற்றிருந்தன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன் ஜார்ஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story