லாட்டரி சீட்டு விற்றவர் கைது


லாட்டரி சீட்டு விற்றவர் கைது
x
தினத்தந்தி 13 Jun 2023 1:00 AM IST (Updated: 13 Jun 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை போலீசார் கண்டறிந்து கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் குள்ளக்காபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்து கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த திருமலைசாமி(வயது 56) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 லாட்டரி சீட்டுகள், ரூ.740 பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story