லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திருவாடானை அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்
தொண்டி
திருவாடானை அருகே வெள்ளையபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த கே.கிளியூர் ராமு (வயது 74) என்பவரை போலீசார் சோதனையிட்டதில் அவரிடமிருந்து 125 லாட்டரி சீட்டுகள், ரொக்கப்பணம் ரூ.2 ஆயிரத்து 900 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story