இன்ஸ்டாவில் மலர்ந்த காதல்...! பள்ளிமாணவியை கடத்தி சென்று குடும்பம் நடத்திய மெக்கானிக்


இன்ஸ்டாவில் மலர்ந்த காதல்...! பள்ளிமாணவியை கடத்தி சென்று குடும்பம் நடத்திய மெக்கானிக்
x
தினத்தந்தி 7 Dec 2022 1:14 PM IST (Updated: 7 Dec 2022 1:59 PM IST)
t-max-icont-min-icon

லச்சி பிரபுவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 15 ஆயிரம் ரூபாய் மற்றும் அடகு வைத்த தங்க நகைகளை மீட்டனர்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியை அடுத்த அண்டலவிளை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 14 வயதான மகள், அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் 21ம் தேதி வீட்டில் இருந்த 5 சவரன் தங்க நகை, ரூ.60 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் செல்போனை எடுத்துக்கொண்டு திடீரென மாயமானார்.

இது குறித்து தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசார் மாணவி மாயமானது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மாணவியின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில், மாணவி கடைசியாக தொடர்பு கொண்ட செல்போன் எண்களை போலீசார் கண்காணிக்க தொடங்கினர். அந்த செல்போன் எண் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இயங்குவது தெரியவந்தது.

இதனையடுத்து, திங்கள்கிழமை காலை சத்தியமங்கலம் வனப் பகுதிக்கு சென்ற போலீசார் அங்குள்ள பங்களா வீட்டை சுற்றி வளைத்து சோதனை செய்த போது, மாயமான பள்ளி மாணவியும், வாலிபர் ஒருவரும் தனிமையில் இருந்த நிலையில், இருவரையும் பிடித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபர் திருப்பூர் வைக்கல்மேடு பகுதியை சேர்ந்த லச்சி பிரபு (22) என்பது பைக் மெக்கானிக். இவருக்கும் பள்ளி மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவிக்கும், பைக் மெக்கானிக் லச்சி பிரபுவுக்கும் தாய் இல்லாத நிலையில், இருவரும் உணர்ச்சி பூர்வமாக இன்ஸ்டாவில் உரையாடியுள்ளனர்.இதனால், பழக்கம் காதலாக மாறி இருவரும் அடிக்கடி கன்னியாகுமரியில் சந்தித்து கணவன், மனைவி போல் தனிமையில் இருந்து வந்தது தெரிய வந்தது.

கடந்த நவம்பர் மாதம் 21ம் தேதி திருப்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த லச்சி பிரபு மாணவிக்கு போன் செய்து, வீட்டில் இருந்து பணம் மற்றும் நகையுடன் வந்தால் இருவரும் எங்கேயாவது சென்று குடும்பம் நடத்தலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறி உள்லார். மாணவியும் வீட்டில் இருந்த 5 சவரன் தங்க நகை, ரூ.60 ஆயிடம் ரொக்க பணத்தையும் எடுத்துக்கொண்டு கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார்.

அங்கு இருவரும் அறையெடுத்து தங்கிய நிலையில், அடுத்த நாள் திருப்பூருக்கு சென்ற அவர்கள் நண்பர்கள் உதவியுடன் நகைகளை அடகு வைத்து, சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு சென்று அங்குள்ள கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்ததோடு, அங்கேயே ஒரு பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து,லச்சி பிரபுவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 15 ஆயிரம் ரூபாய் மற்றும் அடகு வைத்த தங்க நகைகளை மீட்டதோடு, மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, லச்சி பிரபு வை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story