ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்


ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
x
சேலம்

ஆத்தூர்

ஆத்தூர் முல்லைவாடி உப்புஓடை தாகூர் தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மகன் விக்னேஷ் (வயது 21). இவரும், முல்லைவாடி வடக்கு காடு சிலோன் காலனி பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரது மகள் ஆர்த்தி (19) யும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ேஜாடி வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு மாவட்டம் கொடுமுடி கோவிலில் திருமணம் செய்து கொண்டது. பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story