கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்


கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
x

கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

சேலம்

கெங்கவல்லி

சேலம் மாவட்டம் கெங்கவல்லி சாணார் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் கோபிநாத். இவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இங்கு ஆத்தூர் நரசிங்கபுரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சாரதி (வயது 23) என்பவரும் வேலை செய்து வந்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இதற்கு அவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காதல் ஜோடி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி கொடுமுடியில் நேற்று திருமணம் செய்து கொண்டது. பின்னர் காதல் தம்பதி பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. இதையடுத்து போலீசார் இரு வீட்டு பெற்றோரையும் அழைத்து பேசி சமரசம் செய்தனர்.


Next Story