நல்லூர் போலீஸ் நிலையத்தில்பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
நாமக்கல்
கந்தம்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் மணியனூர் முதலியார் தெருவை சேர்ந்த முருகன் மகன் லோகேஷ் (வயது 28). டி.எம்.இ. பி.காம் படித்துள்ள லோகேஷ் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். சித்தம்பூண்டி புதூர் அருந்ததியர் தெருவை சேர்ந்த முருகேசன் மகள் சவுமியா (27). எம்.ஏ., பி.எட். பட்டதாரி.
இந்த நிலையில் லோகேசும், சவுமியாவும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து அவர்கள் நேற்று மணியனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அருகே உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு நல்லூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து நல்லூர் போலீசார் 2 ேபரின் பெற்றோர்களையும் அழைத்து சமரசம் செய்து லோகேஷ் குடும்பத்தினருடன் சவுமியாவை அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story