'அன்பு கொண்ட அண்ணன், நூறாண்டு தாண்டி வாழ்க.!'ஆற்காடு வீராசாமிக்கு முதல் அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

image tweeted by @mkstalin
ஆற்காடு வீராசாமியின் பிறந்தநாளையொட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை,
திமுக மூத்த உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி 86-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும், முதல் அமைச்சர், தன்னுடைய டுவீட்டர் பதிவில் கூறும்போது,
"தலைவர் கலைஞருக்கும் பேராசிரியருக்கும் அன்பு இளவல்! செவித்திறன் பாதிக்கப்படும் அளவுக்கு நெருக்கடிநிலைக்கால சிறைக்கொடுமையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட தீரர்! என் மீது அளவற்ற அன்பு கொண்ட அண்ணன்! அகவை 86 காணும் ஆர்க்காட்டார் நூறாண்டு தாண்டி வாழ்க!" என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






