நீட்தேர்வில் மதிப்பெண் குறைவு: மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி


நீட்தேர்வில் மதிப்பெண் குறைவு: மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
x

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.

திருவள்ளூர

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி நடந்தது. நாடு முழுவதும் இந்த தேர்வை எழுத 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் பதிவு செய்து இருந்தனர். அதில் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் தேர்வை எழுதினர்.

இந்த நிலையில் தேர்வு முடிவு நேற்று இரவு 11 மணிக்கு மேல் தேர்வு முடிவு வெளியானது. அதன்படி, இந்த தேர்வில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதன் தேர்ச்சி சதவீதம் 56.3 ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும், கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதத்தைவிட சற்று குறைந்திருக்கிறது.

இந்நிலையில், திருவள்ளூரை சேர்ந்த மானவி ஒருவர் தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், அதே திருவள்ளூவர் மாவட்டத்தில் திருத்தணி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். மாணவி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.


Next Story