குறைந்த காற்றின் வேகம் - காற்றாலை மின் உற்பத்தியில் கடும் பின்னடைவு


குறைந்த காற்றின் வேகம் - காற்றாலை மின் உற்பத்தியில் கடும் பின்னடைவு
x

காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்து தமிழகத்தின் மின்தேவையில் பெரும்பகுதியை பூர்த்தி செய்கிறது.

சென்னை,

இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கோவை, திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 13 ஆயிரம் காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் காற்று அதிகமாக வீசும்போது காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்து தமிழகத்தின் மின்தேவையில் பெரும்பகுதியை பூர்த்தி செய்கிறது.

ஆரல்வாய்மொழி, முப்பந்தல், பணகுடி உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்குப் பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையில் காற்றாலை மின்னுற்பத்தி அதிகமிருக்கும். ஆனால், இந்தாண்டு எதிர்பார்த்த அளவுக்கு காற்றாலை மின் உற்பத்தி இல்லை.

அந்த வகையில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் காற்றின் வேகம் தற்போது குறைந்துள்ளது. இதனால் காற்றாலை மின் உற்பத்தியில் கடும் பின்னடைவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. சில காற்றாலைகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்த காற்றாலைகள் தற்போது 250 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்கின்றன. இதனால் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Next Story