ரூ.3 லட்சம் பொருட்கள் கொள்ளை


ரூ.3 லட்சம் பொருட்கள் கொள்ளை
x

பேரிகையில் மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர்களை தாக்கி, அலுவலகத்தை சூறையாடி அங்கிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

பேரிகையில் மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர்களை தாக்கி, அலுவலகத்தை சூறையாடி அங்கிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது பறறிய விவரம் வருமாறு:-

துணை மின் நிலையம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில் துணை மின் நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை, லைன் இன்ஸ்பெக்டர் லியாஸ் (வயது 50), உதவியாளர் முனியப்பன் (48) ஆகியோர் மின்வாரிய அலுவலகத்தில் பணியில் இருந்தனர். அப்போது, சுமார் 20 முதல் 23 வயது மதிக்கத்தக்க 10 பேர் மின் வாரிய அலுவலகத்திற்குள் புகுந்தனர். அவர்கள் அலுவலக அறை கண்ணாடிகளை உடைத்தனர்.

மேலும் லைன் இன்ஸ்பெக்டர் லியாஸ், உதவியாளர் முனியப்பன் ஆகியோரை மிரட்டி விட்டு உள்ளே சென்ற அந்த நபர்கள் அங்கு டிரான்ஸ்பார்மரில் இருந்த ரூ.2 லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள வைண்டிங் காயில்கள், 1½ கிலோ வெண்கல போல்ட்டுகள், 3 கணினிகள் என மொத்தம் ரூ.2 லட்சத்து 93 ஆயிரத்து 500 மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

வலைவீச்சு

மேலும் லியாஸ், முனியப்பன் ஆகியோரை தாக்கி தாங்கள் வந்த காரில் கடத்தி சென்று சீக்கனப்பள்ளி என்ற இடத்தில் இறக்கி விட்டு சென்றனர். இது குறித்து அவர்கள் 2 பேரும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து துணை மின் நிலைய பொறுப்பு அதிகாரி முருகன் இது குறித்து பேரிகை போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பேரிகை துணை மின் நிலையத்திற்குள் புகுந்து ஊழியர்களை தாக்கி விட்டு பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் 10 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இச்சம்பவம் பேரிகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story