"இது வெறும் கல்லூரி அல்ல... பெண் குலத்தின் ஒளி விளக்கு" - ராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு


இது வெறும் கல்லூரி அல்ல... பெண் குலத்தின் ஒளி விளக்கு - ராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

"இது வெறும் கல்லூரி அல்ல... பெண் குலத்தின் ஒளி விளக்கு"என ராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

சென்னை ராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

ராணிமேரி கல்லூரியை வெறும் கல்லூரியாக மட்டும் சொல்ல முடியாது. பெண் குலத்துக்கு கல்வியின் ஒளிவிளக்கு என்று தான் சொல்ல வேண்டும். லட்சக்கணக்கான பெண்களுக்கு தன்னம்பிக்கையை தந்தது ராணி மேரி கல்லூரி என்றால் மிகையல்ல.

ராணி மேரி கல்லூரியின் வளாகத்திலேயே விடுதி கட்டித் தரப்படும். பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக தொடர்ந்து பாடுபடும்.

அதிமுக ஆட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம்.

இதனால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டோம்.ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்காக சிறை சென்றது வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வு. ராணி மேரி கல்லூரியை இடிக்க முயன்றபோது சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தோம்.

பட்டம் பெறும் நாள் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான நாள். கல்லூரிகளில் இருந்து தான் விடைபெறுகிறீர்களே தவிர கற்பதில் இருந்து அல்ல என கூறினார்.


Next Story