சிறுமியை கர்ப்பமாக்கியஜவுளிக்கடை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை-ஊட்டி மகிளா கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை கர்ப்பமாக்கியஜவுளிக்கடை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை-ஊட்டி மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 8 Sept 2023 12:30 AM IST (Updated: 8 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கர்ப்பமாக்கிய ஜவுளிக்கடை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.

நீலகிரி

ஊட்டி

சிறுமியை கர்ப்பமாக்கிய ஜவுளிக்கடை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.

சிறுமி கர்ப்பம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் முதலாம் மைல் பகுதியை சேர்ந்தவர் குமாரவேல் (வயது 39). இவர் ஜவுளிக்கடை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

இந்தநிலையில் கூடலூர் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு முடித்துள்ள தாயை இழந்த ஒரு 17 வயது சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியில் கூறக்கூடாது என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ச்சியாக அவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் சிறுமி கர்ப்பமானார். மேலும் சிறுமியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் விசாரணை நடத்தி கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் சிறுமியை கூடலூர் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்

10 ஆண்டு சிறை தண்டனை

இதுபற்றி அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசிலா தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, குமாரவேலை கைது செய்தனர். இதன் பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அந்த தீர்ப்பில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட குமார வேலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து குமாரவேலை கோவை மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.


Next Story