மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் உண்டியல் திறப்பு-ரூ.31 லட்சம் பக்தர்கள் காணிக்கை


மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் உண்டியல் திறப்பு-ரூ.31 லட்சம் பக்தர்கள் காணிக்கை
x
தினத்தந்தி 23 Aug 2023 7:11 PM GMT (Updated: 23 Aug 2023 7:17 PM GMT)

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.31 லட்சம் கிடைத்தது.

சிவகங்கை

திருப்புவனம்

திருப்புவனம் அடுத்த மடப்புரத்தில் தென் மாவட்ட அளவில் புகழ்பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜைகளும், மற்ற நாட்களில் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். தமிழ், ஆங்கில வருட பிறப்பு மற்றும் ஆடி மாதம் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று பத்திரகாளி அம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாரதனை காண்பிக்கப்படும்.

இந்த நிலையில் கோவில் உண்டியல் திறப்பு நேற்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது. மடப்புரம் கோவில் தக்காரும், துணை ஆணையருமான அருணாச்சலம் தலைமை தாங்கினார். உண்டியலில் ரொக்கம் ரூ.31 லட்சத்து 15 ஆயிரத்து 138, தங்கம் 154 கிராம், வெள்ளி 140 கிராம் இருந்தது. உண்டியல் திறப்பு நிகழ்ச்சியில் உதவி ஆணையர் செல்வராஜ், ஆய்வர் சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மடப்புரம் கோவில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி தலைமையில் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story