மதுக்கூரில் அதிகபட்சமாக 34 மி.மீ. மழை பதிவு


மதுக்கூரில் அதிகபட்சமாக 34 மி.மீ. மழை பதிவு
x

தஞ்சை மாவட்டத்தில் மதுக்கூரில் அதிகபட்சமாக 34 மி.மீ. மழை அளவு பதிவானது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக பகல் நேரத்தில் வெயில் அடிப்பதும், இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வல்லம், குருங்குளம், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, வெட்டிக்காடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வரும் நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மழை இன்றி காணப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:மதுக்கூர் 34, பூதலூர் 33, வெட்டிக்காடு 27, பட்டுக்கோட்டை 26, குருங்குளம் 18, திருக்காட்டுப்பள்ளி 16, வல்லம் 15, ஒரத்தநாடு 11, அதிராம்பட்டினம் 10, பேராவூரணி 10, அய்யம்பேட்டை 6, நெய்வாசல் தென்பாதி 5, தஞ்சை 4, பாபநாசம் 3, கும்பகோணம் 2.


Next Story