எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு இரு வழக்குகளில் முன்ஜாமீன் வழங்கியது சென்னை ஐகோர்ட்டு
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சென்னை ஐகோர்ட்டு இரு வழக்குகளில் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை,
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த இவர் மீது ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின்போது தேர்தல் தகராறில் ஈடுபட்டது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக தான்தோன்றிமலை காவல் நிலையங்களில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த இரு வழக்குகளிலும் முன் ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர், சென்னை ஐகோர்ட்டில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை விசாரித்த கோர்ட்டு, இந்த இரண்டு வழக்குகளிலும் விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
Related Tags :
Next Story