மதுரை: தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது - ரூ.18½ லட்சம் நகைகள்-வாகனங்கள் மீட்பு


மதுரை: தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது - ரூ.18½ லட்சம் நகைகள்-வாகனங்கள் மீட்பு
x
தினத்தந்தி 30 Aug 2022 3:21 AM GMT (Updated: 30 Aug 2022 3:42 AM GMT)

திருநகர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம்,

மதுரை, திருநகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக சங்கிலி தொடர் போல திருட்டு, நகைபறிப்பு, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை போன்றவை நடந்துவந்தது. அதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இந்தநிலையில் மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை ஆணையர் சீனிவாச பெருமாள், உதவி ஆணையர் ரவி ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தொடர் திருட்டில் தொடர்பு உடையவர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் சந்தேகத்தின் பேரில் திருப்பரங்குன்றத்தில் சுற்றி திரிந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த ஜனதுல்லா(வயது 45), ரஷ்யா(35) மற்றும் 17 வயது சிறுவன், பேரையூரை சேர்ந்த சித்தாரா (25) என்று தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் வாகனங்களை திருடியதாக ஒப்புக்கொண்டனர்.

மேலும் இவர்கள் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பில் கை வரிசை காட்டியதும் தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரும் கொள்ளையடித்த ரூ.18 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள நகைகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story
  • chat