மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்கு சங்கரன்கோவிலில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி
மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்கு சங்கரன்கோவிலில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவில்:
மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு பற்றி மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக விளம்பர பதாதைகள் மற்றும் ஸ்டிக்கர்களை சங்கரன்கோவில் நகரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், செல்போன்களில் ஸ்டிக்கர்களை ஒட்டும் நிகழ்ச்சியை அ.தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவில் கோவில் வாசல் அருகில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்விக்கு நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சுப்பையா பாண்டியன், ரமேஷ், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள், செல்போன்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகர்மன்ற உறுப்பினர் சங்கரசுப்பிரமணியன், நகர அவைத் தலைவர் வேலுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.