மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை - சு.வெங்கடேசன் எம்.பி


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை - சு.வெங்கடேசன் எம்.பி
x

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை என சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.

மேலூர்,

மதுரை மேலூரில் புறநகர் பஸ் நிறுத்தத்திற்கான நிழற்குடை ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிக்கான பூமி பூஜையை எம்.பி சு.வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,

மதுரை மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை முழு முற்றாக புறக்கணித்துவிட்டு மக்களிடம் வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்று பாஜக பொய் பிரச்சாரத்தை செய்து வருகின்றது.

தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக 3 முறை நாங்கள் பிரச்சினையை எழுப்பியும் தற்போது வரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக ஒரு பைசா நிதியை கூட மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை.

கூட்டத்தொடரில் விவாதத்தின் போது எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கவில்லை. மேலும் 2026 ஆம் ஆண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கின்றார்.

தொடங்குவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாத நிலையில் முடிப்பது குறித்த தகவலை மட்டும் வெளியிடுவது. உலகத்தில் எங்கும் இல்லாத தொழில்நுட்பமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story