மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2028-ல் முழுமையாக செயல்படத் துவங்கும் - மத்திய சுகாதாரத்துறை தகவல்


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2028-ல் முழுமையாக செயல்படத் துவங்கும் - மத்திய சுகாதாரத்துறை தகவல்
x

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதில், 2023-ம் ஆண்டு வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடத்திற்கான வரைபட அனுமதி, சுற்றுச்சூழல் ஆணைய அனுமதி உள்ளிட்ட பணிகள் நடைபெறும் என்றும், 2026-ம் ஆண்டு வரை கட்டட பணிகள் நடைபெறும் எனவும், 2028-ம் ஆண்டு முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story