மதுரை மாநாட்டு மையத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
மதுரை மாநாட்டு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மதுரை,
மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.47.72 கோடி மதிப்பீட்டில் மதுரை தமுக்கம் மைதானத்தில் கட்டி முடிக்கப்பட்ட மாநாட்டு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
10,085 சதுர மீட்டர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் புதிய மாநாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 3,500 நபர்கள் வரை சிரமமின்றி அமர்ந்து பங்கு கொள்ளும் வகையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோயில் அருகே ரூ.44.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்லடுக்கு வாகன நிறுத்துமிடத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மீனாட்சி கோயில் அருகே பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த வாகன நிறுத்தம் நிறுவப்பட்டுள்ளது. தரைமட்டத்திற்கு கீழ் 2 தளங்கள்,மேல் 2 தளங்கள் என மொத்தம் 69,575 சதுர மீட்டர் பரப்பளவில் 4 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.