விநாயகர் சிலை வழிபாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை கூடாது- மதுரை ஐகோர்ட்டு கருத்து


விநாயகர் சிலை வழிபாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை கூடாது- மதுரை ஐகோர்ட்டு கருத்து
x

விநாயகர் சிலை வழிபாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.

மதுரை

விநாயகர் சிலை வழிபாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.

விநாயகர் சிலை ஊர்வலம்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். இந்நிலையில் அன்றைய தினம் திருச்செந்தூர் தாலுகாவில் 7 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டு, பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க அனுமதி கோரி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனு அளிக்க வேண்டும்

அப்போது நீதிபதிகள், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வழிபாட்டில் தேவையில்லாத சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடாது. இவ்வாறான பகுதியில் விநாயகர் சிலைகளை பாதுகாக்க இரவு, பகலாக போலீசார் பணி செய்ய வேண்டி உள்ளது என கருத்து தெரிவித்தனர்.

முடிவில், மனுதாரர் சிலை வைக்கக்கூடிய இடங்களுக்கு அனுமதி கேட்டு தனித்தனியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையை அணுகி உரிய மனு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் விநாயகர் சிலை வைக்க போலீசார் அனுமதிக்க வேண்டும். போலீசாரின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story