மதுரை: ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி..? தெற்கு ரெயில்வே விளக்கம்


மதுரை: ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி..? தெற்கு ரெயில்வே விளக்கம்
x
தினத்தந்தி 26 Aug 2023 9:15 AM IST (Updated: 26 Aug 2023 9:43 AM IST)
t-max-icont-min-icon

மதுரை ரெயில் நிலையம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுரை,

உத்தர பிரதேச மாநில பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்தடைந்தது. மதுரை போடி லைன் பகுதியில் சுற்றுலா ரெயிலின் இரண்டு பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த இரண்டு பெட்டிகளும் மற்றொரு ரெயிலுடன் இணைக்கப்பட்டு, பின்னர் புறப்பட இருந்தது.

இந்த நிலையில், ரெயில் பெட்டியில் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது, ரெயில் பெட்டியில் 90 பேர் இருந்துள்ளனர். தீ விபத்து பற்றி அறிந்ததும் 60-க்கும் மேற்பட்டோர் தப்பியோடி விட்டனர்.

எனினும், தீ விபத்தில் சிக்கி உத்தரபிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், பயணிகள் சட்ட விரோதமாக சிலிண்டர் கொண்டுவரப்பட்டதே விபத்துக்கு காரணம் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் யார் வேண்டுமானாலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்றும், ஆனால் ரெயிலில் பயணிப்பவர்கள் சிலிண்டர் போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டுசெல்லக்கூடாது எனவும் தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட சிலிண்டர் மூலமாக பயணிகள் சமையல் செய்ய முற்பட்டபோது தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெற்கு ரெயில்வே அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Next Story