மே 2ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: கட்டணம் இல்லாமல் தரிசிக்க தெற்கு கோபுரம் வழியாக முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை


மே 2ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்:  கட்டணம் இல்லாமல் தரிசிக்க தெற்கு கோபுரம் வழியாக முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை
x

மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாண விழாவில் பங்கேற்க ரூ.200 முதல் ரூ.500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

வரும் மே 2-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விழாவில் காண்பதற்கான கட்டண விவரங்களை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து அந்த கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண விரும்புபவர்கள், தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை இணையதளத்திலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணையதளத்திலும் வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் ஏப்ரல் 25-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாண விழாவில் பங்கேற்க ரூ.200 முதல் ரூ.500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்புபவர்கள் ஏப்ரல் 22 முதல் 25 ஆம் தேதி வரை hrce.tn.gov.in, maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற தளங்களில் பதிவு செய்யலாம். கட்டணமில்லா தரிசனத்துக்கு தெற்கு கோபுரம் வழியாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மீனாட்சி திருக்கல்யாணம் மே 2-ஆம் தேதி நடைபெறுகிறது.

மேற்கு சித்திரை வீதியில் உள்ள தங்கும் விடுதியில் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் இல்லாமல் தரிசிக்க விரும்புவோர், தெற்கு கோபுரம் வழியாக முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story