மதுரை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 90% நிறைவு - மதுரை மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் தகவல்

மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை, ஜூலை மாதம் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என மதுரை மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் தெரிவித்தார்.
மதுரை,
மதுரை மெட்ரோ ரயில் திட்டப்பணிக்கான அறிக்கை தொடர்பாக 90 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டதாக, மதுரை மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்டமாக மதுரை திருமங்கலத்தில் ஆய்வு நடத்தியுள்ளதாகவும், மதுரை ரயில் நிலையம், வைகை ஆற்றில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பது சவாலாக இருக்கும் எனவும் அர்ச்சுனன் தெரிவித்தார்.
மேலும் மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை, ஜூலை மாதம் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






