மதுரை அருகே பரிதாபம்:மோட்டார் சைக்கிளுடன் கால்வாயில் விழுந்து மாணவர்-கொத்தனார் பலி


மதுரை அருகே பரிதாபம்:மோட்டார் சைக்கிளுடன் கால்வாயில் விழுந்து மாணவர்-கொத்தனார் பலி
x

மோட்டார் சைக்கிளுடன் கால்வாயில் விழுந்து கல்லூரி மாணவர், கொத்தனார் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மதுரை

அவனியாபுரம்,

கால்வாயில் விழுந்தனர்

மதுரை பெருங்குடி அருகே உள்ள சின்ன உடைப்பு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மகன் நிதிஷ்குமார் (வயது 18). இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பாண்டி என்பவருடைய மகன் தமிழரசன் (24). கொத்தனார்.

நேற்று அதிகாலை தமிழரசனும், நிதிஷ்குமாரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். சின்ன உடைப்பு கால்வாய் அருகே சென்றபோது, நிலை தடுமாறி கால்வாயில் தவறி மோட்டார் சைக்கிளுடன் விழுந்து, பலத்த காயம் அடைந்தனர்.

2 பேர் சாவு

இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள், இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இருவரும், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story