மதுரை ரெயில் பெட்டி தீ விபத்து: பாதுகாப்பு குறித்து கண்காணிக்க தவறிய 45 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு


மதுரை ரெயில் பெட்டி தீ விபத்து: பாதுகாப்பு குறித்து கண்காணிக்க தவறிய 45 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு
x

மதுரை ரெயில் பெட்டி தீ விபத்து தொடர்பாக பாதுகாப்பு குறித்து கண்காணிக்க தவறிய 45 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிந்ததில், உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்த 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 174 பிரிவின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் லக்னோ சீதாப்பூரை சேர்ந்த பேசின் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதன் உரிமையாளரை கைது செய்யவும் தெற்கு ரெயில்வே பரிந்துரைத்துள்ளது. டிராவல்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளரும், சுற்றுலா வழிகாட்டியுமான நரேந்திரகுமார், சமையல் பணியாளர் ஹர் தீப் சஹானி, சுற்றுலா உதவியாளர் தீபக், சமையல் உதவியாளர்கள் சத்ய பிரகாஷ் ரஸ்தோகி, கபம் கஸ்யப் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர் அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ரெயில் பெட்டி தீ விபத்து தொடர்பாக பாதுகாப்பு விதிமுறைகளை கண்காணிக்க தவறியதாக அதிகாரிகள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story