Normal
மதுரை வீரன் கோவில் திருவிழா
மதுரை வீரன் கோவில் திருவிழா நடக்கிறது.
கரூர்
நொய்யல்,
பழமாபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற மதுரை வீரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் ஆகிய சுவாமிகளும் உள்ள. இதையடுத்து திருவிழாவை முன்னிட்டு பூச்சாட்டுதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க தீர்த்தங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல், மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். வாணவேடிக்கை நடைபெற்றது. இரவு 10 மணியளவில் கரகாட்டம் நடைபெற்றது. நேற்று முன்தினம் கிடா வெட்டு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் புராண நாடகம் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story