பெண்ணை கடத்தி பலாத்காரம்: 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த மதுரை கோர்ட்டு


பெண்ணை கடத்தி பலாத்காரம்: 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த மதுரை கோர்ட்டு
x

குற்றவாளிகள் இருவரும் போலீசாரை தாக்க முயற்சி செய்தபோது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மதுரை

மதுரை,

மதுரையில் கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர், கடந்த 2021-ம் ஆண்டு உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, மேலமடையை சேர்ந்த குருவி விஜய் (வயது 34), கார்த்திக் என்ற மவுலி கார்த்திக் (31) ஆகியோர் அவரை பின்தொடர்ந்து சென்று, கத்தியை காண்பித்து மிரட்டி கடத்தி சென்றனர். பின்னர் அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற வேனில் வைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் 2 பேரையும், அண்ணாநகர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் போலீசாரை தாக்க முயற்சி செய்தபோது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை மதுரை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குருவி விஜய், கார்த்திக் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story