மாயமான கல்லூரி மாணவர் கண்டுபிடிப்பு
மாயமான கல்லூரி மாணவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
கரூர்
கரூர் காக்காவாடியை சேர்ந்த கவின் (வயது 18). இவர் தளவாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கல்லூரி சென்ற கவினை மாலை வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாயமான கவினை கண்டுபிடித்து தருமாறு வேலாயுதம்பாளையம் போலீஸ் புகார் செய்யப்பட்டது. இந்தநிலையில், குளத்துப்பாளையம் பகுதியில் உறவினரின் வீட்டில் கவின் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து நேற்று கவினை உறவினர்கள் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி முன்பு ஆஜர்படுத்தினர். மாணவனுக்கு அறிவுரைகள் கூறி மாணவரின் தாயாருடன் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story