சமயபுரம் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம்


சமயபுரம் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம்
x

சமயபுரம் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

திருச்சி

சமயபுரம்:

அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் நிறைவடையும் நாளில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியும், அம்மனுக்கு மகா அபிஷேகமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை வசந்த மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், செண்பகம், சரக்கொன்றை உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவில் அம்மன் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


Next Story