துர்க்கை அம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம்
சங்கராபுரம் துர்க்கை அம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
சங்கராபுரம் ஏரிக்கரையில் பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உலக நன்மை வேண்டி மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாக பூஜை, விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து திரவங்களை கொண்டு மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. முன்னதாக துர்க்கை அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தன உள்ளிட்ட 16 வகையான பொருட்களை அபிஷேகம் நடத்தப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story