மணிப்பூரில் அமைதி நிலவவேண்டிதிரவுபதி அம்மன் கோவிலில் மகாசண்டி யாகம்
மணிப்பூரில் அமைதி நிலவவேண்டி திரவுபதி அம்மன் கோவிலில் மகாசண்டி யாகம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள அரசங்குப்பம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் மகா சண்டி யாகம் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டியும், அனைவர் இல்லத்திலும் செல்வம் பெருகிட வேண்டியும் நடந்த இந்த யாகத்தை சிவ ஸ்ரீ சிவாதீனம் 28-வது குரு மகா சன்னிதானம் சிவஸ்ரீ காசிவிஸ்வநாத சிவாச்சாரியார் முன் நின்று நடத்தினார். முன்னதாக புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது. இதில், அரசங்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story