திருவண்ணாமலை மலை உச்சியில் 2-வது நாளாக சுடர் விட்டு எரியும் மகா தீபம்..!


திருவண்ணாமலை மலை உச்சியில் 2-வது நாளாக சுடர் விட்டு எரியும் மகா தீபம்..!
x

2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. கடந்த 23-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது.

கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் 11 நாட்கள் மலையின் உச்சியில் காட்சி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் கொட்டும் மழை மற்றும் காற்றிலும் இன்று 2-வது நாளாக சுடர் விட்டு எரிந்து வருகிறது. இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்த்து தரிசனம் செய்து வருகின்றனர்.


Next Story