வள்ளலார் ஆத்ம யோக ஞான சபை ஆஸ்ரமத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது


வள்ளலார் ஆத்ம யோக ஞான சபை ஆஸ்ரமத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் கலெக்டர் கலந்துகொண்டார்.

ராணிப்பேட்டை

பொன்னை அருகே வள்ளலார் ஆத்ம யோக ஞான சபை ஆஸ்ரமம் சுமார் 1,500 அடி உயரம் கொண்ட சித்தர் மலையில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபுநாளில் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சித்தர் மலை உச்சியில் வள்ளலார் ஆத்ம யோக ஞான சபை சார்பில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காலையில் மகாதீபம் ஏற்றுவதற்காக 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதில் 250 மீட்டர் காட்டன் திரியை பயன்படுத்தி மாலை 6 மணி அளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு ஆத்ம யோக ஞான சபை சன்மார்க்க வள்ளலார் கொடியை ஏற்றி வைத்து வழிபட்டார். மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டு தீபம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story