மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா


மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே தென்பாதி மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் ஊராட்சி தென்பாதி கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 143-ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 21- ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் தீமிதி திருவிழா நடந்தது. முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் தேரழுந்தூர் தாமரை குளக்கரையில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வாணவேடிக்கைகள், மேள வாத்தியங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நிகழ்வு நடந்தது.

1 More update

Next Story