மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருச்சி

காட்டுப்புத்தூர்:

காட்டுப்புத்தூர் அருகே ஸ்ரீராமசமுத்திரம் காவிரி நகர் வடகரையில் உள்ள மகா மாரியம்மன் கோவில், நாமக்கல் ஸ்தபதி தமிழ்ச்செல்வன் தலைமையில் புதுப்பிக்கப்பட்டு செல்வ விநாயகர், முருகன், பெரியசாமி, வேம்படியான், மல்லாண்டவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. நேற்று மகா மாரியம்மன், பரிவார தெய்வங்களின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பெரியதனக்காரர் ஆர்.தங்கதுரை, ஊர் தலைவர் மதியழகன், துணைத்தலைவர் கொடியரசு, செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஜம்புலிங்கம், துணைச்செயலாளர் அரங்கராஜன், கணக்கர் புஷ்பநாதன், மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், ஊர் மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

1 More update

Next Story