பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மகா சாந்தி யாகம்


பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மகா சாந்தி யாகம்
x

கும்பாபிஷேக 12-ம் ஆண்டு நிறைவையொட்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மகா சாந்தி யாகம் நடந்தது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில், பாலாற்றின் படுகையை ஒட்டி அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் 107-வது திவ்ய தேசமாக பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் உபயதாரர்கள் பங்களிப்புடன், கும்பாபிஷேக நிறைவு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று 12-வது ஆண்டு நிறைவு விழா ஆகும். இதனை முன்னிட்டு, ஊர் பொது மக்கள் சார்பில், பால்குட ஊர்வலம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஊர்வலம் கிராம தேவதை எல்லையம்மன் கோவிலில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலில் முடிவுற்றது. அதைத்தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆதாரனை நடைபெற்றது. அப்போது உற்சவர் மண்டபத்தில் மகாசாந்தி யாகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருப்பாவாடை உற்சவமும் நடந்தது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், கோவில் உபயதாரர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story